தமிழக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி

போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேளம்பாக்கம் அருகே படூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கதிரவன். இவரது மகள் அதித்தி சமா (வயது14). சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு சுமார் 11 மணியளவில் மாணவி அதித்தி சமா குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி அதித்தி சமா 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT