உணவகங்களில் மயோனைஸ் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு உரிமம் இடை நீக்கம் செய்யப்படும் எனவும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அசைவ உணவகங்களில் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையில் செய்த மயோனைஸ் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது
இதனால் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி முதல் மயோனைஸ் தயாரிக்க இருப்பு வைக்க விற்பனை செய்ய தடை விதித்துள்ளது
கிரிமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸ் தவிர்க்க வேண்டும். பச்சை முட்டையில் இயல்பாக காணப்படும். சால்மோனெல்லா லிஸ்ட்டீரியா போன்ற பேட்டரி அக்கிருமிகள் மயோனைசில் சேர்ந்துவிடும்
இதை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு டைபாய்டு ஒலித்த பல்வேறு நோய்கள் ஏற்படும் இதை மீறி உணவகங்களில் மயோனைஸ் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இடை நீக்கம் செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைசில் அல்லது முட்டை கலக்காத சைவ மயோனைஸ் தயாரித்து விற்பனை செய்யலாம் மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.மறுசுழற்சி தன்மை உள்ள மக்கும் பொருட்களை உபயோகிக்க வேண்டும்
இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.