தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை - உணவுத்துறை எச்சரிக்கை

நியாய விலை கடையில் தவறுகள் கண்டறியப்பட்டால் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தினமும் தலைமைச் செயலகத்துக்கு வந்து ஒவ்வொரு துறைவாரியாக உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு துறைகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிகிறார்.

தலைமைச் செயலகத்திற்கு காலையில் வந்தால் மாலை 5 மணி வரை அங்கிருந்தே ஆய்வு மேற்கொள்கிறார். அவரது ஆய்வை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் சரியான எடையில் கிடைப்பதை உறுதி செய்ய மின்னணு தராசு ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் நியாய விலை கடையில் உள்ள தராசு எடையை பொதுமக்கள் பார்க்கும் வகையில் இருபுறமும் டிஸ்ப்ளே தெரிகிறதா? என கடை பணியாளர்கள் சரி பார்க்க வேண்டும் என்று உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நியாய விலை கடையில் தவறுகள் கண்டறியப்பட்டால் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

நியாய விலைக் கடை பணியாளர்கள் கவனமுடன் விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று உணவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலும் வழங்கி உள்ளனர்.