கவுந்தப்பாடி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று பொது மக்கள் பேசி வருகிறார்கள்.
கவுந்தப்பாடி ஈரோடு அய்யங்காடு அருகே ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வரும் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார். இவர் 35 சென்ட் பரப்பளவில் கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் வாங்கி நிறுத்தி விற்பனை செய்து வருகிறார்.
இடத்தின் ஒரு பகுதியில் சுற்றுவளைகள் அமைத்து நாட்டுக் கோழிகள் கட்டு சேவல் வளர்த்து வருகிறார். இரவு அலுவலகம் மற்றும் வளாகத்தை பூட்டி சென்றார். இந்த நிலையில் இரவு தெரு நாய்கள், கம்பி வலைகளையும் தாண்டி கோழி செட்டில் புகுந்து 4 கட்டு சேவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்து குதறி சென்றுள்ளது.
காலை வழக்கம்போல் அலுவலகத்தைத் திறந்து செந்தில் கோழி செட்டில் பார்க்கும்போது கோழிகள் இறந்து கிடந்துள்ளது. நாய்கள் வந்ததற்கான அறிகுறி தெரிந்து நாய்கள் கோழிகளை கடித்து கொன்றது தெரிந்தது. தெரு நாய்களின் தொல்லையால் கோழிகள் இறந்தது குறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
துப்புரவு பணியாளர்கள் இறந்த கோழிகளை அப்புறப்படுத்த எடுத்துச் சென்றார்கள். மேலும் செந்தில்குமார் கூறும் போது வளர்த்த கோழிகளின் மதிப்பு சுமார் 30 ஆயிரத்திலிருந்து 38 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவித்தார்.
கவுந்தப்பாடி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று பொது மக்கள் பேசி வருகிறார்கள்.