தமிழக செய்திகள்

திருவொற்றியூர் மண்டலகுழு கூட்டத்தில் 5 கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்றதால் சலசலப்பு

காங்கிரஸ் உறுப்பினர் திரவியம் மற்றும் கம்யூனிஸ்டு கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

முந்தைய கூட்டங்களில் 150 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.

திருவொற்றியூர் மண்டல கூட்டம், தலைவர் தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல அலுவலர் சங்கர், செயற்பொறியாளர் ஜெயராமன், நல அலுவலர் லீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் தி.மு.க.வை சேர்ந்த கவி.வீ கணேசன், ராஜகுமாரி, அ.தி.மு.க. உறுப்பினர் கார்த்திக், காங்கிரஸ் உறுப்பினர் திரவியம் மற்றும் கம்யூனிஸ்டு கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

மண்டல கூட்டம்

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மண்டல குழு தலைவர் தனியரசு பேசும் போது, எந்த பொருளுக்கும் இரண்டு செயற்பொறியாளர்களும் கையெழுத்து போடுவதில்லை. எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் பெரும்பான்மை கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. நாங்கள் பதவியை ராஜினாமா வேண்டுமானால் செய்கிறோம் என்றார். முந்தைய கூட்டங்களில் 150 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT