தமிழக செய்திகள்

மாநில செயலாளர் இன்பதுரை தலைமையில் அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனைக் கூட்டம்- நாளை நடக்கிறது

எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க இன்பதுரை தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. அ.தி. மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் வக்கீல் பிரிவு மாநிலச் செயலாளராக ஐ.எஸ். இன்பதுரை நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க இன்பதுரை தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் பெற்ற பிறகு அ.தி. மு.க. அணிகளில் வக்கீல் அணியே முதல் கூட்டத்தை கூட்டியுள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க. அரசு போட்டு வரும் பொய் வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக வக்கீல் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.