தமிழக செய்திகள்

அ.தி.மு.க.-வில் பிளவு..! ஆளுநரை சந்திக்க இ.பி.எஸ் திட்டம்

தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை.

தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை பறித்த நிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க இபிஎஸ் தரப்பு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சி அமைத்த பின்னர் குதிரை பேரம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.