சென்னை:
தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06070) மறுநாள் 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் எழும்பூரில் இருந்து வரும் 17, 24, மே 1-ந் தேதிகளில் பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06069) மறுநாள் ஏப்ரல் 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து வரும் 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06166) மறுநாள் 13, 20, 27 ஆகிய தேதிகளில் பகல் 11.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கத்தில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06165) மறுநாள் 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
சிறப்பு ரெயில்களில் 1 குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டி, 6 குளிர் சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதி பொருளாதார வசதிப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டி மற்றும் சரக்கு வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.