தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-போடிநாயக்கனூர் இடையிலான சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து வருகிற 20, 27-ந்தேதிகளில் இரவு 10.30 மணிக்கு போடிநாயக்கனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதேபோல, போடிநாயக்கனூரில் இருந்து வருகிற 21, 28-ந் தேதிகளில் மாலை 4.45 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.