தமிழக செய்திகள்

கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்- சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்

மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 27, ஜூன் 3 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06076), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம்-சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து வருகிற 26, ஜூன் 2 ஆகிய தேதிகளில் காலை 10.15 மணிக்கு புறப்பட்டு சந்திரகாச்சி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06075), மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 27, ஜூன் 3 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06076), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.