தமிழக செய்திகள்

ஓணம் பண்டிகை: சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரெயில் இயக்கம்

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரெயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலமாக பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

ரெயில் கால அட்டவணை மற்றும் தேதிகள்:

1. சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06117)

இயக்கப்படும் நாட்கள்: வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்)

தேதிகள்: ஆகஸ்டு 13, 15, 20, 22, 27, 29 மற்றும் செப்டம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் இந்த ரெயில் இயக்கப்படும்.

நேரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மறுநாள் மாலை 04:20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

2. கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06118)

இயக்கப்படும் நாட்கள்: வாரம் இருமுறை (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்)

தேதிகள்: ஆகஸ்டு 14, 16, 21, 23, 28, 30 மற்றும் செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் இந்த ரெயில் இயக்கப்படும்.

நேரம்: கொல்லத்தில் இருந்து மாலை 06:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11:35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்பும் பயணிகள், இந்த சிறப்பு ரெயில் சேவையைப் பயன்படுத்தி, ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரெயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலமாக தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.