தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும்.
உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு.
மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு.
மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.