தமிழக மின்சார வாரியம் 
தமிழக செய்திகள்

மின்கட்டண உயர்வு புகார்கள் குறித்து சிறப்பு ஆய்வு- தமிழக மின்சார வாரியம் தகவல்

ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர்.

மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ அல்லது எக்ஸ் வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.

மின்நுகர்வோர்களுக்கு கூடுதலாக மின் கட்டணம் வந்திருப்பதாக பொது மக்கள் பரவலாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டு உள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 0.75 சதவீதம் மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளன.

மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ அல்லது எக்ஸ் வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.

200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்து உள்ளனர். இந்தத் திட்டத்தினால் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர்.

மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த வருடம் ஜூலை மாதம் வரை தொடர்ந்த கோடை வெயிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே பெரும்பாலோருக்கு மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.