தமிழக செய்திகள்

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் - சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது.

மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பதிலுரைத்தார். அவர் கூறுகையில்,

காவிரி புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு முயற்சிக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக அரசுக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறிய ஒரு பத்தி இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை இணைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக அரசுக்கு எதிரான தீர்மானத்தின்போது பாஜக எம்எல்ஏ மட்டும பேசாத நிலையில் மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.