உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற வலையபட்டி, ஸ்ரீமஞ்சமலை சுவாமி கோவிலில் சுவாமிக்கு பொங்கல் வைத்து, ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழை வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை செய்யபட்டது. இந்த நிகழ்வில் மடத்து கமிட்டி தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் மடத்து கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழ் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஊர் பெரியோர்கள் என அனைவரையும் நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டே போலவே இந்த ஆண்டும் சுமார் 1,100 காளைகள் அவிழ்த்து விட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பல்வேறு சிறப்புமிக்க பரிசு பொருட்கள் வழங்க உள்ளதாகவும் கமிட்டி நிர் வாகிகள் தெரிவித்தனர்.