தமிழக செய்திகள்

ஜெம் வீரமணியை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி!

கடந்த வாரமும் இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி உள்ளிட்ட 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு, சென்னை போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வீரமணி உள்பட நான்கு பேரை மூன்று நாட்களுக்கு மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வு குழு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி எஸ். பத்மா முன்பு விசாரணைக்கு வந்தநிலையில், காவல்துறை ஏற்கனவே விரிவான விசாரணையை நடத்திவிட்டதாகவும், மேலும் காவலில் வைத்து விசாரிப்பது தேவையற்றது என்றும் வீரமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 2 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT