மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடைக்கு சென்று பதிவு செய்வது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது.
கை விரல் ரேகை அல்லது கருவிழி பதிவை மேற்கொள்ள ஏற்கனவே பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி பலர் கைவிரல் ரேகையை பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று விடுபட்ட பயனாளிகளுக்கு ரேகையை பதிவு செய்ய தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். பணி நிமித்தமாக வேறு ஊர்களில் இருப்பவர்கள் அங்கு அருகில் உள்ள எந்த ரேசன் கடைக்கும் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு செல்பவர்கள் ஆதார் அட்டை நகலையும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.
அப்போதுதான் எவ்வளவு உணவுப் பொருள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் சிலர் ரேசன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்காமல் வைத்துள்ளனர். எனவே அவற்றை சரி செய்ய ரேசன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பெறப்படுகிறது.
அப்போதுதான் உண்மைத்தன்மை தெரிய வரும். எனவே கைரேகை பதியாதவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பாக இன்று ரேசன் கடைகளில் சிறப்பு முகாம் மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.