திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரமோற்சவம் திருவிழா மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பதி பிரமோற்சவம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் திருப்பதியில் இருந்து இந்த இடங்களுக்கும் இன்று முதல் 21-ந்தேதி வரை பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தினசரி 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, காரைக்குடி, நாகப்பட்டினம், செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தவிர நாளை 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 10-ந்தேதி (சனிக்கிழமை) மகாளய அமாவாசை மற்றும் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களுக்கு நாளை 1075 பஸ்களும், சனிக்கிழமை 845 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 210 பஸ்களும் சனிக்கிழமை 180 பஸ்களும் இயக்கப்படுகிறது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக 875 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.