தமிழக செய்திகள்

பொன்னேரியில் சோலார் மின்சாரம் விழிப்புணர்வு சிறப்பு முகாம்

பொன்னேரியில் சோலார் மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,சென்னை மின் பகிர்மான வட்டம், வடக்கு பொன்னேரி, தண்டையார்பேட்டை கோட்டங்கள் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சோலார் மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பொன்னேரி

பொன்னேரி திருவேங்கடபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் சோலார் அமைப்பு பற்றி பதிவு செய்யவும், வங்கி கடன் பெறுவது, அரசு திட்டங்கள் மானியங்கள் பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் பொன்னேரி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், பொன்னேரி உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT