தமிழக செய்திகள்

3 பேரின் ராஜினாமாக்கள் ஏற்பு- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

எம்எல்ஏ பதவி விலகும்போது அதற்கான காரணத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை.

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமாவின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

விதிகளுக்கு உட்பட்டு 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டுள்ளது.

ராஜினாமா கடிதம் முறையாக இருக்கிறதா? இல்லையா என்பதை பார்க்க வேண்டியதுதான் எனது பணி.

எம்எல்ஏ பதவி விலகும்போது அதற்கான காரணத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுகவின் இரு தரப்பினரும் மனு அளித்துள்ளனர். ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை.

அதிமுகவின் மனுக்கள் குறித்து விதிகளின்படி நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.