தமிழக செய்திகள்

பா.ஜ.க.வால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பாரதிய ஜனதா கட்சியால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

* சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.

* அமெரிக்காவிடம் பிரதமர் தலைகுனியக்கூடாது, அவர் தலைகுனிவது இந்தியாவே தலைகுனிவது போன்றது.

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.