மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார்.
அப்போது, அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி இபிஎஸ் கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.
மேற்கொண்டு அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி.
அதிமுக ஆட்சியில் கோவையின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக. திமுக ஆட்சியில் கோவைக்கன திட்டங்கள் இல்லை. சிட்காட், சாலை, மேம்பாலம் என அதிமுக செய்து நிலுவையில் இருந்த திட்டங்களை திமுக தொடரவில்லை.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது திமுக.
கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும்
அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.
ஊருக்குள் நுழையும் காட்டுப்பன்றியை சுடுவதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
பேச அனுமதி கேட்டபோது பலமுறை முகத்தை கூட திருப்பமாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு என சபாநாயகர் தெரிவித்தார்.