சென்னை எம்.ஆர்.சி. நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமைச்சரவையில் இடம் பெறுவோம் என நாங்கள் ஒருமுறை கூட கூறவில்லை.
* பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு தரவில்லை.
* எங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
* அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ளது கருத்து வேறுபாடு தானே தவிர பிளவு இல்லை.
* அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்கள் தொடர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை
* ஒரு தலைமுறையை தாண்டி அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி என்பது எங்களுடைய உயிர்மூச்சு.
இவ்வாறு அவர் கூறினார்.