அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி, புதுவையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திண்டுக்கல், தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.