தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை தவிர்ப்பதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
* மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.
* மீட்பு உபகரணங்கள், முதல்நிலை மீட்பாளர்கள், மீட்பு படையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* தேவையான பகுதிகளில் மீட்பு படையினரை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.
* நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
* பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை தவிர்ப்பதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்
* வடகிழக்கு பருவமழை முன்பாக நீர்நிலைகள் தூர்வாருதல், ஆகாய தாமரை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
* பலவீனமான மின்கம்பங்கள், மின்கோபுரங்களை உடனடியாக சீரமைக்க மின்துறைக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.