ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. மானாமதுரை, தாம்பரம், திருச்சி, எழும்பூர் இடையே பயணிகள் வசதிக்காக இந்த ரெயில்கள் இயக்கப்படும். குறிப்பிட்ட நேரங்களில் புறப்படும் ரெயில்கள், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சில பகுதிகளுக்கு முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* மானாமதுரையில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06162), அதேநாள் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06159), மறுநாள் காலை 11 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து வருகிற 20-ந்தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06160), அதேநாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* திருச்சியில் இருந்து இன்று காலை 5.50 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ஒரு வழி சிறப்பு ரெயில் (06192) அதேநாள் காலை 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
* சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06193), மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து வருகிற 20-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06194), மறுநாள் காலை 6.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.