சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திருச்சி - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து 5,12,19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதியம் காலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06007) அதேநாள் மதியம் 1.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கமாக அதே தேதிகளில் பெங்களூருவில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பும் சிறப்பு ரெயில் (06008) இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்தடையும். இதேபோல, தூத்துக்குடி - தாம்பரம் இடையில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06018) வரும் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும், தாம்பரம் - தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரெயில் (06017) 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலும் நீடித்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.