தெற்கு ரெயில்வே அறிவிப்பின்படி, பயணிகள் நெரிசலை குறைக்க மதுரை–தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22624) ரெயிலில் அக்டோபர் 3 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 வரை தற்காலிகமாக ஐந்து 3ம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இதே ஏற்பாடு தாம்பரம்–மதுரை (22623) ரெயிலில் அக்டோபர் 4 முதல் ஜனவரி 3 வரை அமல்படுத்தப்படுகிறது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி, மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-22624) அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி வரை கூடுதலாக ஐந்து 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
இதே பெட்டிகள், தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதி வரை மதுரை செல்லும் ரெயிலிலும் (22623) இணைக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12694) இன்று முதல் அடுத்த மாதம் 30-ந்தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. இதே பெட்டி, எழும்பூரில் இருந்து 1-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை தூத்துக்குடி செல்லும் ரெயிலும் (12693) இணைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.