தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல்-கோவை, எழும்பூர்-மங்களூரு சென்ட்ரல், எழும்பூர்-தஞ்சாவூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:-
* சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (வண்டி எண்.12243), மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (12244) நாளை மறுநாள் (21-ந்தேதி) தற்காலிகமாக ஒரு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
* சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16159) இன்று (19-ந்தேதி), மறுமார்க்கமாக மங்களூரு சென்ட்ரலில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16160) நாளை மறுநாள் (21-ந்தேதி) தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
* சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16865) இன்று (19-ந்தேதி) மற்றும் நாளை (20-ந்தேதி), மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16866), நாளை (20-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (21-ந்தேதி) தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.