மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் 
தமிழக செய்திகள்

VIDEO: தொடங்கியது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: அருகருகே அமர்ந்த முதலமைச்சர் விஜய்- டி.கே.சிவக்குமார்

இந்த மாநாட்டில் எல்லைப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், தொகுதி மறுவரையறை, காவிரி நீர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியது.

சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரள முதல்-மந்திரி சதீசன் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பங்கேற்காத நிலையில் துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா பங்கேற்றுள்ளார். புதுச்சேரி சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுவார் என்பதால் முதலமைச்சர் ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க துணை நிலை ஆளுநர், முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர்.

தென்மாநிலங்களுக்கு இடையேயயான உறவை சுமூகமாக பேணும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எல்லைப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், தொகுதி மறுவரையறை, காவிரி நீர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் விஜய் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.