சோத்துப்பாறை அணை 
தமிழக செய்திகள்

தொடர்மழையால் 72 அடியை கடந்த சோத்துப்பாறை அணை நீர்மட்டம்

கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.49 அடியாக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. இதன் மொத்த கொள்ளளவு 126.28 அடியாகும். இந்த அணை மூலம் பெரியகுளம், வடுகபட்டி, தாமரைக்குளம், ஜெயமங்கலம், குள்ளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல், மா, தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.

பருவமழை

மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் சரிந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.49 அடியாக உயர்ந்துள்ளது. 44 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் தேவைக்காக 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 32.21 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

வைகை அணை

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 41.93 அடியாக உள்ளது. 70 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1110 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீார்மட்டம் 116.60 அடியாக உள்ளது. 193 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2015 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 26.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

மழையளவு

பெரியகுளம் 18, மஞ்சளாறு 26, சோத்துப்பாறை 20.4, போடி 9, கூடலூர் 1.2, பெரியாறு அணை 20.1, தேக்கடி 7.8, சண்முகாநதி 4.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT