தமிழக செய்திகள்

மழை நின்றும் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கும் சோத்துப்பாறை நீர்மட்டம்

தொடர் மழையின் போது பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 126.28 அடி என முழு கொள்ளளவை எட்டியது.

மழை முற்றிலும் நின்ற நிலையிலும் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்த நிலையில் கடந்த 1 வாரமாக மழை முற்றிலும் நின்று வறண்ட வானிலை காணப்படுகிறது. தொடர் மழையின் போது பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 126.28 அடி என முழு கொள்ளளவை எட்டியது.

மழை

அதன் பிறகு மழை முற்றிலும் நின்ற நிலையிலும் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 83 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

அணைகளின் நிலவரம்

வைகை அணையின் நீர்மட்டம் 51.25 அடியாக உள்ளது. வரத்து 170 கன அடி. திறப்பு 86 கன அடி. இருப்பு 2160 மி.கன அடி. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடி. வரத்து 403 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 2984 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.50 அடி. வரத்து 67 கன அடி. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 28.20 அடி. வரத்து 2 கன அடி.

SCROLL FOR NEXT