தமிழக செய்திகள்

சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறுகி இருக்கிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்கதர்கள் குவிந்து வருகின்றன.

அதன்படி இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்குகிறது. திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழவானது நடைப்பெற இருக்கிறது.

இன்று மாலை 4 மணிக்கு திருசெந்தூர் கடற்கரையில் எழுந்தருளும் ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி எஸ்பி சிவபிரசாத் தலைமையில் சுமார் 4000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்ப்ட்டுள்ளனர். பகத்தர்களின் நலன் கருதி 493 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது

குறிப்பாக பக்தர்களின் நலன் கருதி தற்காலிகக் கழிப்பறைகள், குளியலறைகள், தங்கும்இடங்கள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு தண்ணீர் பாட்டில்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ வசதிக்காக தற்காலிக மருத்து முகாம்காள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும், ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து கோயிலுக்கு இலவச மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT