தமிழக செய்திகள்

எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது..!- சோனியா புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை குறித்து ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை என்றும் தகவல் வெளியானது.

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி முயன்றதாகவும்,

குறிப்பிட்ட நாளில் வேறு பணிகள் இருப்பதாக ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், சோனியாவுக்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சோனியா புத்தக வெளியீட்டு விழாவில் ராகுலின் தொலைபேசி அழைப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்தாரா எனும் செய்தியாளர்களின் கேள்விக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார்.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மேலும் கூறியதாவது:-

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை நாங்களும் மதிக்கிறோம்.

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்திருக்கலாம். அதுபற்றி தெரியவில்லை.

ஆனாலும் அழைப்பை ஏற்பதா, வேண்டாமா என்று எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT