தமிழக செய்திகள்

சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.. என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும் - எம்எல்ஏகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 10 ஆம் தேதிக்கு வரை சென்னையில் இருக்க வேண்டும்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கட்சி தாவிய காங்கிரசுக்கு கண்டனம், அவசர முடிவுகள் எடுக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த சூழலில் ஆலோசனை கூட்டத்தில் தேர்வான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது, கட்சியின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

சிறப்பான எதிர்க்கட்சியாக செய்லபட வேண்டும் என்பது என் விருப்பம்.

என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 10 ஆம் தேதிக்கு வரை சென்னையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.