தமிழக செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் 'சமூக நீதி கணக்கெடுப்பு'- ஆளுநர் அர்லேகர்

கனிம வள கொள்ளையை தடுக்க அரசு இரும்புக்கர நடவடிக்கை எடுக்கும்.

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றியதாவது:-

இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகள் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி அளிக்கப்படும்.

கனிம வள கொள்ளையை தடுக்க அரசு இரும்புக்கர நடவடிக்கை எடுக்கும்.

18,274 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டு உள்ளது. இடைத்தரகர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்த பின் மாநில அரசு சமூக நீதி கணக்கெடுப்பை மேற்கெள்ளும்.

தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்கு பின் இருமொழி கொள்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.

இருமொழிக் கொள்கையே இந்த அரசும் தொடர்ந்து பின்பற்றும்.

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

மும்மொழி கொள்கையை வலியுறுத்தி மாநிலத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு மறுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT