பனி மூட்டம் 
தமிழக செய்திகள்

கோவையில் கனமழையை தொடர்ந்து கடும் பனி மூட்டம்

பீடம்பள்ளி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் மூடுபனி நிலவியது

தனியார் பஸ்கள், கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி குறைந்த வேகத்திலேயே ஊர்ந்து சென்றனர்.

கோவை புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சூலூர், பட்டணம், பீடம்பள்ளி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் மூடுபனி நிலவியது. குறிப்பாக அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புகை மண்டலம் போல அடர்ந்த பனிப்பொழிவு காணப்பட்டது.

பாதிப்பு

இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் எளிதில் புலப்படாத சூழல் உருவானது. குறிப்பாக, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமான எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள்

வாகனங்களின் கண்ணாடிகளில் பனித்துளிகள் படர்ந்து பார்வைத்திறன் குறைந்ததால், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி குறைந்த வேகத்திலேயே ஊர்ந்து சென்றனர்.

இயல்பு நிலை

காலை 7 மணிக்கு மேல் பனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. அதிகாலை வேளையில் நிலவிய இந்த கடும் பனிப்பொழிவால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதுடன், காலை நேர குளிர் பொதுமக்களின் அன்றாட பணிகளையும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களையும் சற்று முடக்கியது.

SCROLL FOR NEXT