தமிழக செய்திகள்

வசனம் பேசுவது உங்களுக்கு உதவாது... போக்கை மாற்றிக்கொள்ளுங்கள் - முதலமைச்சருக்கு சிவசங்கர் அட்வைஸ்

விஜய் இன்றும் நடிகராகவே செயல்படுகிறார்.

சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

அப்போது, டாஸ்மாக்கில் பார்ட்டி பண்ட் விஷயம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

* கள எதார்த்தம் தெரியாமல் எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை பேசுகிறார். விஜய் இன்றும் நடிகராகவே செயல்படுகிறார்.

* சட்டமன்றத்தில் இன்று வசனம் பேசியதுபோல் பேசுவது என்றும் உதவாது. உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுங்கள் CM.

* குற்றச்செயல்களில் ஈடுபட்ட தவெகவினர் குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.

* கதை சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். உங்கள் அப்பா என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை என பேசியது நினைவில்லையா?

* உங்கள் குடும்பத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் விஜய். மடைமாற்றியே அரசியல் செய்துவிடலாம் என நினைக்காதீர்கள்.

* இதுவரை நடந்த ஆட்சி ஊழல் ஆட்சி, நாங்கள் மட்டுமே ஊழலற்ற ஆட்சி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT