தமிழக செய்திகள்

91-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 91-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள “மாலைமலர்” அலுவலகத்தில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை, அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க நிறுவன தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்,

த.வெ.க.

த.வெ.க. நிர்வாகிகள் புத்தூர் கட்டு டாக்டர் ஆர்.எஸ்.வேலுமணி, அன்புசெழியன், ராஜீவ்காந்தி, இ.சி.சேகர்,

காங்கிரஸ்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுனாலா, நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், திருவான்மியூர் மனோகரன், வில்லியம்ஸ்,

பா.ஜ.க.

தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் வன்னியராஜன், ராமையா,

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் இரா.செல்வம், நிர்வாகிகள் மின்னல் பாபு, விஜயகுமார், ஸ்டார் ஜனா, மோகன், சென்னீர் சேகர்,

சமத்துவ மக்கள் கழகம்

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, பாஸ்கர், சீனிவாசன், ராஜேஷ், தாஸ், ஆனந்தவேல், சாமுவேல், பாக்யராஜ், சரவணன், சங்கரபாண்டியன்,

பெருந்தலைவர் மக்கள் கட்சி

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் புழல் ஏ.தர்மராஜ், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், நிர்வாகிகள் எம்.வைகுண்டராஜா, எஸ். அன்னராஜ், மடிப்பாக்கம் சாமுவேல் ரவி, வி.எஸ்.கே.செந்தில்குமார், டி.உதய குமார், ஆர்.பாலமுருகன், விருகை மணிராஜ், ஏ.முருகேசப் பாண்டி, வி.பி.அய்யர், ஆர்.செல்வராஜ், எல்.சுந்தரலிங்கம், ராமச்சந்திரன், சிவராஜ், சந்தீப்ராஜா, எம்.எம்.டி.ஏ. பாலமுருகன்,

புதிய நீதிக்கட்சி

புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் எஸ்.பழனி, எஸ்.எல்.சுதர்சன், என்.லோகநாதன், சி.பி.ராதா கிருஷ்ணன், வி.சீனிவாசன், ஏ.ஜி.முருகப்பெருமான், பி.வேலாயுதம், ஆர்.முரளி, ஆர்.எம்.ராமசாமி, சங்கர், வசந்த், கார்த்திக், ஆர்.வெங்கடேசன்,

அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்கப்பெருமாள், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, தேசிய செயலாளர் எல்.எஸ்.வசீகரன், மாநில தலைவர் டாக்டர் மணியப்பன்,

நாடார் சங்கம்

கிழக்குகடற்கரை சாலை நாடார் சங்க தலைவர் கொட்டிவாக்கம் முருகன், நிர்வாகிகள் அசோக்குமார், முத்துக்குமார், அறிவழகன்,

குரோம்பேட்டை நாடார் சங்க நிர்வாகிகள் ஜெயபால், முகேஷ் ராஜ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் என்ஜினீயர் விஜயகுமார், நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பூந்தமல்லி தொகுதி தலைவர் ஆர்.ராமராஜ், திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க செயலாளர் சிவராஜ், துணைத் தலைவர்கள் விவேக், விஜயகுமார், பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் துரை,

திருவான்மியூர் மத்திய மாவட்ட நாடார் பேரவை தலைவர் சுரேஷ், செயலாளர் சுபாஷ், அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் நாடார், பொதுச்செயலாளர் வைரவன் நாடார், மாநில தற்காப்பு கலை பிரிவு செயலாளர் சரவணன் நாடார், செயல் தலைவர் மகாராஜன் நாடார், துணை செயலாளர் காமராஜ் நாடார்.

வணிகர் சங்கம்

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் எம்.மாரிதங்கம், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன், செயலாளர் விஷ்ணு, மலைராஜா, மத்திய சென்னை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மாரிமுத்து,

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் துரைப்பழம், செயலாளர்கள் ராமமூர்த்தி, வைகுண்டராஜ், பால் கிருஷ்ண கண்ணன், திரைப்பட நடிகர் ஐ.டி.அரசன், ஷத்திரிய பாசறை மாநில தலைவர் ஆதித்யா ஆர்.ஜி.சம்பத்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT