தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் படுக்கை அறை கதவு மூடியதால் சிக்கி தவித்த அக்காள்-தம்பி மீட்பு

கதவில் இருந்த கைப்பிடி வைத்த பூட்டு திடீரென பழுதானது.

திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவு பூட்டை லாவகமாக உடைத்து அறையில் சிக்கி இருந்த 2 குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருவொற்றியூர், பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு குமார். வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது 10 வயது மகளும், 4 வயது மகனும் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இருந்தபடி கதவை பூட்டினர். அப்போது கதவில் இருந்த கைப்பிடி வைத்த பூட்டு திடீரென பழுதானது.

தீயணைப்பு வீரர்கள்

இதனால் கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அக்காளும், தம்பியும் படுக்கை அறையில் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவு பூட்டை லாவகமாக உடைத்து அறையில் சிக்கி இருந்த 2 குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT