தமிழக செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1091 என்ற உதவி எண் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அழைப்பிற்கும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1091 உதவி எண்ணிற்கு அழைப்பு வந்தவுடன், அந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு படை உதவி எண் 1091 அவசர கால சேவை 112 என்ற எண்ணுடன் இணைக்கப்பட்டதால் வேகமான தகவல் பரிமாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.