அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் மாநில மாணவரணிச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் சிங்கை ராமச்சந்திரன்.
கடந்த மாதம் அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் சில உள் கட்சி மாற்றங்கள் காரணமாக விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார் இவரது தந்தை சிங்கை கோவிந்தராசும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆவார்.