முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ் பேசிய கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒருமுறையாவது "தமிழகத்திற்கு நீட் வேண்டாம்" என்றோ, "மும்மொழிக் கொள்கையைத் திணிக்காதீர்கள்" என்றோ பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியது உண்டா?
அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கொண்டு, அவர் காட்டிய இருமொழிக் கொள்கையைக் காக்க இவர்களால் முடிந்ததா? மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, இங்கே முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாகக் கொட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.