தமிழக செய்திகள்

தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் தி.மு.க.வை குறை கூறுவதா?- கனிமொழி

சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் அறியணும்.

சங்கரன்கோவிலில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது திருச்சியில் இன்று முதலமைச்சர் விஜய் கூறிய திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கனிமொழி எம்பி கூறியதாவது:-

சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் அறியணும்.. திமுகவை குறை சொல்லிக் கொண்டிருப்பதனால் இங்கே நடக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க பின்னரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு திமுக தான் காரணம் எனக்கூறுவதா?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.