நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேகதாது அணை பிரச்சனை குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 950 டிஎம்சி மழை. மொத்தம் 4000 டிஎம்சியில் 1500 தான் பயன்படுத்தப்படுகிறது. மீதம் 2500 கடலில் செல்கிறது.
எத்தனை ஆண்டுகளாக இப்படி போகிறது என்று நினைக்கிறீர்கள்?
இந்த 2500-ல் இன்னொரு 1500 நாம் சேமித்தாலே, 150 டிஎம்சிக்கு கர்நாடகாவிடம் ஏன் போய் நிற்க வேண்டும்.
அதே மாதிரி நெய்வேலி பழுப்பு நிலக்கரி உனக்கு இல்லை. உன் வளம் உனக்கு உன் நீர்வளம் உனக்கு. உன் நிலவளம் உனக்கு என்றால் என் நிலவளம் எனக்கு..
அந்த சண்டை செய்ய ஒரு வீரன் தேவைப்படுகிறான். அதற்கு ஏன் நீங்கள் இல்லை? மத்திய அரசு என்ன பண்ணிவிடும்.. பூட்டு அங்க இருக்கும். ஆனால் சாவி என்கிட்ட இருக்கும்.
இப்படிதான் என்டிஆரைஎல்லோரும் கிண்டல் செய்துக்கொண்டிருந்தார்கள். நடிகன் தானே இவர் என்ன செய்துவிடுவார் என்று.. இந்திரா காந்தி மிகவும் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார்.
ஒரே இரவில் மத்திய அரசு அலுவலகம் எல்லாவற்றையும் பூட்டிவிட்டு சாவி எடுத்துவந்து படுத்துக்கிட்டாரு.
பிறகு, கெஞ்சி சமரசம் செய்தபிறகு திறந்துவிட்டார். அப்படி ஒருத்தர் வேணும். சும்மா எல்லாத்துக்கும் கால்ல விழுந்து கெஞ்சிக்கிட்டு இருக்கணுமா?
கர்நாடக மாநில முதல்வரும் சரி, துணை முதல்வரும் சரி அவர்களது மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறீர்களா? உங்களுக்கு வாக்கு செலுத்தி அதிகாரத்தில் உட்கார வைத்த மக்களவை நீங்கள்விட்டு, இந்தியாவை காப்பாற்ற போறேன் என்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.