பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சந்தானம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை குறைக்க அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனைகள் நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கவிதாவின் உத்தரவுப்படி புதியதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையர் சந்தானம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஜெ.என்.ரோடு மற்றும் ராஜாஜி சாலையில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பைகள் உபயோகித்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.17 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 60 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சந்தானம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.