தமிழக செய்திகள்

வாழப்பாடியில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய கடைக்காரர் கைது

வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி காய்கறி கடைக்காரர் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள் (வயது 20) சேலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளமறிவியல் படித்து வருகிறார்.

இவர் கல்லூரி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் (45) என்பவர் வாழப்பாடி பேளூர் பிரிவுரோடு அருகே நடத்தி வரும் காய்கறி மற்றும் மளிகை கடையில் உதவியாளராக வேலை செய்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் கல்லூரி மாணவியை வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற விஜயன் அந்த மாணவியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி காய்கறி கடைக்காரர் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.