வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானையை காட்டுக்குள் விரட்டியதோடு, சுப்பையா உடலை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
செங்கோட்டை அருகே உள்ள புளியரையை அடுத்த தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 70). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார்.
இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு புளியரை தெட்சிணா மூர்த்தி கோவில் பின்புறம் கொட்டாவிகுளம் பகுதியில் உள்ளது. இன்று காலையில் சுப்பையா தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது தோட்டத்தில் புகுந்த யானை ஒன்று அவரை காலால் மிதித்தது. இதில் சுப்பையா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானையை காட்டுக்குள் விரட்டியதோடு, சுப்பையா உடலை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.