தமிழக செய்திகள்

தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர் பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா!

கடந்தாண்டு செப்டம்பர் மாதம்தான் தீயணைப்புத்துறை ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், தனது தீயணைப்புத்துறை ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்தாண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் அரசால் உருவாக்கப்பட்ட தீயணைப்பு ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் பதவியேற்று 9 மாதங்களே ஆகும்நிலையில், தற்போது ஆணையம் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவருடன் சேர்ந்து தீயணைப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் நமச்சிவாயம், சத்தியமூர்த்தி, விக்ரம் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக இருந்த முன்னாள் டி.ஜி.பி. சுனில் குமாரும், தமிழ்நாடு தகவல் ஆணையராக உள்ள முன்னாள் டி.ஜி.பி. அபய் குமார் சிங்கும் ராஜினாமா செய்துள்ளனர்.