தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தாராபுரத்தில் மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சுற்றில் 5 வாக்குகள் முன்னிலை பெற்றது அதிமுக. அதன்பின் 4 சுற்றுகள் முடியும் வரை அதிமுக முன்னிலை பெற்றது. அதன்பின் அதிமுக பின்தங்கிய த.வெ.க. முன்னிலை பெற்றது. 17 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 51,253 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 42,390 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 32,892 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
இன்னும் 6 சுற்றுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மக்களின் இந்த முடிவு குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பானுமதி கூறுகையில் "மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் தீர்ப்பை தலைவணங்குகி ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.